தர்மபுரி, அக்.13: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சிலம்பம், டேக்வாண்டோ, கராத்தே ஆகிய தற்காப்புக் கலைகள் மற்றும் ஓவியம், நடனம், சதுரங்கம் போன்ற கலைப் போட்டிகளில், சானை படைத்த மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிவர்த்தனம் என்னும் தலைப்பில் பாராட்டு விழா நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, செந்தில் கல்வி நிறுவனங்களின் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத் தலைவர் மணிமேகலை கந்தசாமி தலைமை வகித்தனர். செயலாளர் தனசேகர், தாளாளர் தீப்தி தனசேகர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார். செந்தில் கந்தசாமி பேசுகையில், ‘நல்ல சமூகம் உருவாக நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வியுடன் கூடிய நன்னடத்தையையும் கற்றுத் தரவேண்டும்,’ என்றார். விழாவில், சிறப்பு விருந்தினராகத் தர்மபுரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவைச் சேர்ந்த டிஎஸ்பி சூர்யா கலந்து கொண்டு பேசினார். விழாவில் முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் சிவராமகிருஷ்ணன், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement