கடத்தூர், செப்.12: கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வகுத்துப்பட்டி ஊராட்சியில், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள், ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஒன்றிணைந்து ஊராட்சிக்கு உட்பட்ட பொது வளாகம், தெருவோரம் தூய்மை நடைப்பயணம் மேற்கொண்டு, கழிவு பொருட்கள், குப்பைகள் உள்ளிட்ட பொருட்களை ஒன்றிணைந்து தூய்மை பணி மேற்கொண்டனர். ஊராட்சியை தூய்மையாக வைக்கவும், குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து ஊராட்சி பணியாளர்களிடம் வழங்கவும், பொது இடங்களில் சுத்தம், திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்து கழிவறை பயன்படுத்தும் முறைகள் குறித்து, பொதுமக்களுக்கு ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அறிவுரை வழங்கினார்.
+
Advertisement