அரூர், செப்.12: அரூர் ஒன்றியம், மொரப்பூர் பனந்தோப்பு தனியார் திருமண மண்டபத்தில், நேற்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. ஆர்டிஓ செம்மலை தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தென்னரசு குத்துவிளக்கேற்றி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வன், கலைசெல்வி, தாசில்தார் பெருமாள், முல்லைசெழியன், குள்ளு, தங்கசெழியன், ஆதிமூலம், சிற்றரசு, கருணாநிதி, பிரகாசம், சபி, ஊராட்சி செயலர்கள் ஜெயகநாதன், மதியழகன், பூராஜ், மதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் அக்ரஹாரம், செட்ரப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை, குடிநீர் இணைப்பு, குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வாரிசு, சாதி மற்றும் வருமான சான்று கேட்டும், மின்இணைப்பில் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் 1,190 மனுக்களை வழங்கினர்.
+
Advertisement