தர்மபுரி, டிச.11: தர்மபுரி டவுன் போலீஸ் எஸ்ஐ மகேந்திரன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தர்மபுரி- பென்னாகரம் மேம்பாலத்தில், கார் ஒன்று வேகமாக வந்தது. இதை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார், அந்த காரை நிறுத்துமாறு கூறினர். அப்போது, காரை நிறுத்திய நபர், போலீசாரை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தார். பின்னர், போலீசார் அந்த காரை சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 474 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் கார் மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர். இதின் மதிப்பு ரூ.4 லட்சத்து 24 ஆயிரமாகும். மேலும், தப்பி ஓடிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


