தர்மபுரி, அக்.10: தர்மபுரி வெண்ணாம்பட்டி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45). சேலம் மாநகராட்சி அலுவலகத்தில், தணிக்கை துறை பிரிவில்p ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கமாக தனது வீட்டில் இருந்து டூவீலரில் புறப்பட்டு, தர்மபுரி மாவட்டம் பழைய கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து பஸ்சில் சேலம் வந்து செல்வார். நேற்று முன்தினம், வழக்கம் போல டூவீலரை நிறுத்தி விட்டு, சேலத்தில் பணி முடிந்து மாலை தர்மபுரி திரும்பியுள்ளார். அங்கு பழைய கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான டூவீலரை காணவில்லை. இதுகுறித்து ராமச்சந்திரன், தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தார்.
+
Advertisement