தர்மபுரி, செப்.10: தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. போட்டிகளை கலெக்டர் சதீஸ் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார். மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டிகளில், 3ம் ஆண்டு வரலாற்றுத்துறை மாணவன் கிரிமுருகன் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடம் பெற்றோர். மேலும், குண்டு எறிதல் போட்டியில் 2ம்இடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். இதேபோல், காது கேளாத மாற்றுத்திறனாளிகள் பிரிவில், இளங்கலை தமிழ்த்துறை முதலாம் ஆண்டு மாணவி மௌனிகா, 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் முதலிடமும், குண்டு எறிதல் போட்டியில் 3ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற வீரர், வீராங்கனையை கல்லூரியின் முதல்வர் கண்ணன், கல்வி இயக்குனர் பாலமுருகன், அனைத்து துறை பேராசிரியர்கள், மாணாவ, மாணவிகள் பாராட்டினர்.
+
Advertisement