தர்மபுரி, அக.9: தர்மபுரியில் மாவட்ட காவல்துறை சார்பில், நேற்று நடந்த பெட்டிஷன் மேளாவில் 71 மனுக்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டது.
தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில், பெட்டிஷன் மேளா (பொதுமக்களின் குறைதீர்க்கும் முகாம்) நேற்று நடந்தது. மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி பாலசுப்பிர மணியம் முன்னிலை வகித்தார்.
முகாமில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 31 காவல் நிலையங்களில் உள்ள போலீசார் கலந்து கொண்டு எஸ்பி உத்தரவின் பேரில், புகார் மனுக்கள மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகாமில், 71 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு, 71 மனுக்களுக்கும் உடனே தீர்வு காணப்பட்டது. முகாமில் புதிதாக 51 மனுக்கள் பெறப்பட்டன. முகாமில், டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்ஐகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.