தர்மபுரி, அக்.9: தர்மபுரி மாவட்டம், அரூர் நேதாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் சகாயநாதன்(55), சலவை தொழிலாளி. கடந்த 6ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விக்னேஷ்(26) என்பவர், தனது சட்டையை கொண்டு வந்து, சலவை செய்து தருமாறு கூறியுள்ளார். ஆனால், சகாயநாதன் ஒரு சட்டையை மட்டும் சலவை செய்வதால் நஷ்டம் ஏற்படும் என கூறி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சகாயநாதனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த சகாயநாதன், அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து, ஆட்டோ டிரைவர் விக்னேசை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement