காரிமங்கலம், அக்.9: காரிமங்கலம் ஒன்றியம், பூமாண்டஅள்ளி, காளப்பனஅள்ளி மற்றும் மல்லிக்குட்டை ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயனடையும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் பூமாண்டஅள்ளி ஊராட்சி மோதூரில் இன்று (9ம்தேதி) நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கும் முகாமில், பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. எனவே, மேற்கண்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள், தங்களது பல்வேறு குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை, முகாமில் அளித்து பயன் பெறும்படி பிடிஓ.,க்கள் தனலட்சுமி, சர்வோத்தமன் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
+
Advertisement