தர்மபுரி, செப்.9: நல்லாம்பட்டியில் மாவட்ட அளவிலான மல்லர் கம்பம் போட்டி நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கவியரசி, பாஸ்கர் ஆகியோர் வரவேற்றனர். இப்போட்டியை நேரு யுவகேந்திரா முன்னாள் கணக்கு மற்றும் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் தொடங்கி வைத்தார். தர்மபுரி மாவட்ட மல்லர் கம்ப சங்க கவுரவ தலைவர் பழனி, தலைவர் சுரேஷ் தலைமை வகித்தனர். போட்டிக்கு கல்வெட்டு ஆர்வலர் பல்வேல் திரையன் முன்னிலை வகித்தார். அகில இந்திய வானொலி தர்மபுரி நிலைய இயக்குநர் கோபாலகிருஷ்ண, உடற்கல்வி ஆசிரியர்கள் குப்பாகவுண்டர், குழந்தைவேல், முனிராஜ், துரை, முருகவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினர். மாவட்ட மல்லர் கம்பம் சங்க செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.
+
Advertisement