தர்மபுரி, அக்.8: பென்னாகரம் அருகே உள்ள கொட்டாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பென்னாகரம் தீயணைப்பு நிலைய அதிகாரி சந்தோசம் தலைமையிலான குழுவினர், பள்ளியில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். காஸ் சிலிண்டரில் தீப்பிடித்தால் அணைக்கும் முறை, தீவிபத்து, நீர் நிலைகளில் விழுந்த வரை காப்பாற்றுதல், பாதுகாப்பாக பட்டாசுகளை வெடித்தல் போன்ற பல்வேறு ஒத்திகைகளை செய்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் குமார், ஆசிரியர்கள் சுரேஷ், சி.சுரேஷ், செல்லம், ஸ்ரீமதி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement