காரிமங்கலம், அக். 8: தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக, மாவட்ட எஸ்பி மகேஸ்வரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ. சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார், தர்மபுரி மாவட்ட எல்லையான கும்பாரஅள்ளி செக்போஸ்டில் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வேகமாக வந்த, கர்நாடக பதிவேடு கொண்ட காரை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை, மூட்டையாக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 500 கிலோ எடையுள்ள ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா மூட்டைகள் மற்றும் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், குட்கா கடத்தலில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த ரவி(44) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement