காரிமங்கலம், அக்.8: காரிமங்கலம் வட்டாரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2வது நாளாக நேற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காரிமங்கலம் அருணேஸ்வரர் மலைக்கோவில் வளாகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வட்டார தலைவர் மாதேஷ், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் சின்னபையன் மற்றும் நிர்வாகிகள், கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். தமிழக முதல்வர் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர், கூட்டுறவு வங்கி பணியாளர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். கூட்டத்தில் சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
+
Advertisement