தர்மபுரி, டிச.7: தர்மபுரி மாவட்டம் ஏரியூர் பூச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ரம்யா (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பமானார். கடந்த 1ம்தேதி வீட்டு மாடியில் துணிகளை காயபோடுவதற்காக ரம்யா சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயமடைந்த ரம்யாவுக்கு ரத்த போக்கு ஏற்பட்டதால், அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் ரம்யா உயிரிழந்தார். இதுபற்றி ஏரியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


