பென்னாகரம், டிச.7: ஒகேனக்கல் ஊட்டமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நேற்று பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் வேதா, துணைத்தலைவர் சத்யா ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் கூத்தரசன், கூட்டத்தின் நோக்கம் பற்றியும், பள்ளி மேலாண்மை குழு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றியும் விளக்கினார். கூட்டத்தில் பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் வெங்கடேசன், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
+
Advertisement


