பாப்பாரப்பட்டி, நவ. 7: பென்னாகரம் அருகே நல்லப்பநாயக்கனஅள்ளி கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பாப்பாரப்பட்டியில் இருந்து நல்லப்பநாயக்கன்நெல்லிக்கு செல்ல சாலைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஓராண்டாக இந்த சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதில் மழைநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் செல்வதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இரவு நேரங்களில் இந்த சாலையில் வருபவர்கள் குழிகள் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement

