கடத்தூர், அக்.7: கடத்தூர் அடுத்த சில்லாரஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி படைவீட்டம்மாள்(60) கூலித் தொழிலாளி. இவர் கடந்த 30ம்தேதி காய்கறி வாங்குவதற்காக சில்லாரஅள்ளி பஸ் நிலையத்துக்கு சாலையில் நடந்து சென்ற போது, கடத்தூரில் இருந்து பொம்மிடி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் மூதாட்டி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கடத்தூர் எஸ்ஐ நாவளன் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
+
Advertisement