அரூர், ஆக. 7: தர்மபுரி மாவட்டம், அரூர் கச்சேரிமேட்டில் உள்ள தர்மபுரி வேளாண் விற்பனைக்குழுவின் கீழ், செயல்படும் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், பருத்தி ஏலம் நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு எடுத்து வருகின்றனர். இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், 120க்கும் மேற்பட்ட விவசாயிகள் 700 மூட்டை பருத்தியை விற்பனைக்கு எடுத்து வந்தனர். இதில், ஆர்சிஎச் ரகம் குவிண்டடால் ரூ.7,599 முதல் ரூ.8,316 வரை ஏலம் போனது. சுமார் ரூ.21.50 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement