பாப்பிரெட்டிப்பட்டி, டிச.6: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல், சார்பு நீதிமன்றங்கள் உள்ளன. இதில் 55க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பணியாற்றி வருகின்றனர். கோர்ட்டில் வழக்கீல்கள் வழக்குகளை இ-பைலிங் முறையில் முதலில் பதிவுசெய்ய வேண்டும் எனும் நடைமுறை கடந்த 1ம்தேதி முதல் கோர்ட்டில் நடைமுறைக்கு வந்தது. இதை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி, நேற்று பாப்பிரெட்டிப்பட்டியில் வக்கீல்கள் கோர்ட் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டில் வழக்குகள் ஏதும் நடைபெறாமல் கோர்ட் வளாகம் வெறிச்சோடியது.
+
Advertisement

