Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உழவர் தின விழா கொண்டாட்டம்

தர்மபுரி, டிச.6: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே புலிகரையில் வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தில் உழவர் தின விழா நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசு திட்டங்களில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம், நுண்ணீர் பாசனம் அமைத்தல், மண் மாதிரி எடுத்தல், பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டம், பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம், காளான் வளர்ப்பு பயிற்சி வழங்குதல், பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள், அங்கக வேளாண்மை, விவசாயிகள் அங்கக சான்றிதழ் வாங்கும் வழிமுறைகள் மற்றும் விதைப்பண்ணை அமைக்கும் முக்கியத்துவம், கால்நடை துறையில் உள்ள மானிய திட்டகங்கள், கோமாரி நோய் தடுப்பூசி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்சியில் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் சிவக்குமார், வேளாண் உதவி இயக்குநர் மதியழகன், கால்நடை பல்கலைகழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவர் புகழரசி, கால்நடை உதவி மருத்துவர் நடராஜன், கரும்பு அலுவலர் கேசவன், தோட்டகலை உதவி அலுவலர் சங்கர், உதவி வேளாண்மை அலுவலர்கள் சத்யா, மஞ்சுநாதிஸ்வரன், வேளாண்மை அலுவலர் அனுசுயா, தினேஷ்குமரன், அட்மா திட்ட தொழில்நுட்ப அலுவலர்கள் மகேஸ்வரி, அருள்குமார், தமிழ்ச்செல்வி மற்றும் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.