தர்மபுரி, நவ.5: தர்மபுரி மாவட்டத்தில் எம்.ஒட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பயிரிட்டுள்ள மஞ்சள் செடிகளுக்கு களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய வட்டாரங்களில், சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், தர்மபுரி தாலுகாவிற்கு உட்பட்ட எம்.ஒட்டப்பட்டி, செம்மனஅள்ளி, செட்டிக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மஞ்சள் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழை காரணமாக மஞ்சள் செடிகளுக்கு களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
