தர்மபுரி, நவ.5: மகேந்திரமங்கலம் வீராசாலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(50), விவசாயி. இவர் வீட்டில் இருந்த 40 பவுன் நகையை அடமானம் வைத்து, கால்நடை தீவன கடை வைத்துள்ளார். இந்த மாத இறுதிக்குள் 5 பவுன் நகையை மீட்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்கான வருவாய் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தன் மகனிடம் புலம்பி வந்த முருகன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள சமையல் அறைல், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
