பென்னாகரம், டிச.4: தாயுமானவன் திட்டத்தின் கீழ், ஊட்டமலை கிராமத்தில் 35 முதிய பயனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் பகுதியில், ஒகேனக்கல், ஊட்டமலை ஆகிய கிராமங்களில் 2 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஒகேனக்கல், சத்திரம், இந்திரா நகர், ஏரிக்காடு, ராணிப்பேட்டை, ஊட்டமலை, நாடார் கொட்டாய் ஆகிய பகுதி மக்கள், இந்த 2 ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி வருகின்றன. இந்நிலையில், தமிழக முதலமைச்சரால் வயதானவர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டமான, தாயுமானவன் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஒகேனக்கல் ஊட்டமலை கிராம பகுதியில், உள்ள 2 கடைகளிலும் 35 பயனாளிகள், இந்த திட்டத்தின் மூலம் மாதம் தோறும் பயனைடந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் வீடு தேடி விற்பனையாளர் தொல்காப்பியம், உதவியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் அரிசி, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வழங்கினர்.
+
Advertisement

