தர்மபுரி, டிச.4:தர்மபுரியில், டிட்வா புயலால் காரணமாக ஊட்டி, கொடைக்கானல் போன்று கிளைமேட் குளிர்ச்சியாக மாறி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். டிட்வா புயல் எதிரொலியாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. வெயில் சற்று அடித்தாலும், பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், நேற்று காலை முதல் தர்மபுரியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. மேலும், குளிர்ந்த காற்று வீசியதால் பருவநிலை மாறியது. தர்மபுரியில், பெரும்பாலும் வெயில் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், தற்போது தர்மபுரியில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று நகரமே கிளைமேட் மாறி குளிர்ச்சியாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தர்மபுரியில் எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை. ஆனால் குளிர்ந்த காற்று வீசுகிறது.
+
Advertisement

