அரூர், டிச.4: தொட்டம்பட்டியில், சாலையோர ஆக்கிரமிப்புளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். மொரப்பூர்-கல்லாவி சாலையில், சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று கொண்டுள்ளது. இதனால் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை அடுத்து தொட்டம்பட்டியில், சாலையை ஆக்கிரமித்து இருந்தவர்களை இடத்தை காலி செய்யுமாறு, கடந்த 15 நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் பலரும் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனை அடுத்து நெடுஞ்சாலை துறையினர் நேற்று சாலையோர ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் அகற்றினர். உதவி கோட்ட பொறியாளர் ஜெய்சங்கர், உதவி பொறியாளர் இனியன் மற்றும் சாலை ஆய்வாளர்கள் சம்பவ இடத்தில் இருந்து பணியை பார்வையிட்டனர். தொடர்ந்து அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில், போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
+
Advertisement

