காரிமங்கலம், டிச. 2 : காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில், எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பூமாண்டஅள்ளி, காளப்பனஅள்ளி, மல்லிக்குட்டை ஆகிய ஊராட்சிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் வீடு வீடாக சென்று எஸ்ஐஆர் பணிகள் குறித்து, பிடிஓ சர்வோத்தமன் ஆய்வு செய்தார். மேலும் எஸ்ஐஆர் விண்ணப்பங்கள் குறித்த காலத்திற்குள் பொதுமக்களிடம் இருந்து பெற, ஊராட்சி நிர்வாகத்திற்கு அறிவித்தார். தொடர்ந்து ஊராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இன்ஜினியர் ஸ்ரீதர், ஊராட்சி செயலாளர்கள் குணசேகரன், வெங்கடேஷ், தனபால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
+
Advertisement

