தர்மபுரி, நவ.1: தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை நூலள்ளி பகுதியை சேர்ந்தவர் முத்து மகள் கிருத்திகா (17). 10ம் வகுப்பு படித்து முடித்து வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் திரும்பவில்ைல. இதுகுறித்து அவரது பெற்றோர் அதியமான்கோட்டை போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கிருஷ்ணாபுரம் பி.மோட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகள் சரண்யா(20). நாமக்கல் தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 2ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 26ம்தேதி, கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற சரண்யா பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் கிருஷ்ணாபுரம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement
