தர்மபுரி, நவ.1: பென்னாகரம் தாலுகா, பெரும்பாலை ஊராட்சி பூதநாயக்கன்பட்டி கிராமத்தில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். இக்கிராமத்தில் 19 தெருவிளக்குகள் உள்ளது. இதில் ஒன்றுகூட எரிவதில்லை. கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியாததால், கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பூதநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து தெருவிளக்குகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement
