தர்மபுரி, அக்.1: தர்மபுரி போலீஸ் எஸ்ஐ வெங்கடேஷ் குமார் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராமக்காள் ஏரிக்கரையில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த வாலிபரிடம் போலீசார் சோதனை நடத்தினர். அவர் விற்பனைக்காக 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர் அரூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த மகிழவன்(21) என்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மகிழவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
+
Advertisement