தர்மபுரி, ஜூலை 14: அரூரில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வந்தவர் சின்னமாது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அரூர் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கலந்தாய்வு நடந்தது. அப்போது, சின்னமாதுவிடம் காலி பணியிடங்களை முறையாக நிரப்ப வேண்டும் என்று கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், அரூர் தொடக்கக்கல்வி அலுவலர் சின்னமாது, நீலகிரி மாவட்டத்திற்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராணிபேட்டை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலராக பணியாற்றி வந்த விஜயகுமார், அரூர் தொடக்கக்கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
+
Advertisement