கடத்தூர், ஜூலை 26: கடத்தூர் அடுத்த தாளநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளியில் நேற்று நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் தலைமை ஆசிரியர் அசோகன் தலைமை வகித்தார். அறிவியல் ஆசிரியர் மனோகரன் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் இம்பிரியாஜெகன் முன்னிலை வகித்தார்.
பள்ளியின் வளர்ச்சி பணிகள், மாணவர்களின் கற்றல் திறன் மேம்பாடு அடைய பெற்றோர்களின் பங்களிப்பு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த சிறப்பு பயிற்சி, மாணவர்களின் பாதுகாப்பு, ஊட்டச்சத்து உணவு, பள்ளி கட்டிடங்கள் மற்றும் மைதான பராமரிப்பு பணிகள், தனியார் பள்ளிக்கு இணையாக மாணவர்களுக்கு பாடக்குறிப்பு எழுத டைரி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் பெற்றோர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பள்ளி இருபால் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.