தர்மபுரி, ஜூலை 26: பென்னாகரம் பகுதியில் நடந்து வரும் சாலை பணிகளை சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் தர்மபுரி கோட்ட பொறியாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். பென்னாகரம் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் மற்றும் தர்மபுரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜி ஆகியோர் ஆய்வு செய்தனர்.
முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பென்னாகரம் இருவழி சாலையை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளையும், சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முடிவுற்ற பென்னாகரம்-ஒகேனக்கல் சாலை பணிகள் மற்றும் ஒகேனக்கல்- பென்னாகரம் பகுதியில் அமைக்கப்பட்ட சாலை, நாகதாசம்பட்டி முதல் பென்னாகரம் வரை அமைக்கப்பட்ட சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் மற்றும் தர்மபுரி நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் நாகராஜ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், சாலையில் தார் கலவை சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்ய சாலையை துளையிட்டு அளவீடு செய்தனர். அதன் பின்பு சாலையின் அகலம், கணம் குறித்தும் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது பென்னாகரம் உதவி கோட்ட பொறியாளர் புருஷோத்தமன், பென்னாகரம் உதவி பொறியாளர் சிங்காரவேலு, மற்றும் சாலை ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.