தர்மபுரி, ஜூலை 30: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விபத்தில்லா தர்மபுரியை உருவாக்கிடுவோம் என்ற விழிப்புணர்வு பாடல் வெளியீடு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் சதீஸ், எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர் பாடலை வெளியிட்டனர். வழக்கறிஞர் மற்றும் சமூக விழிப்புணர்வாளரான சுபாஷ் எழுதியுள்ள பாடலுக்கு பிரபுதாஸ் இசையமைத்து பாடியுள்ளார். பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஹனிபா, தொழிலதிபர் வெங்கடேஷ் பாபு, ஜேசிஐ ரவிக்குமார், எஸ்பிஐ விஜயகுமார், பாபு, ஆச்சி சிவா, பிரசன்னா, கணேஷ் மற்றும் இந்தியன் பில்லர் வினோத் கலந்து கொண்டனர்.
+
Advertisement