தர்மபுரி, செப்.11: தர்மபுரி மூக்கனஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பில், ஊட்டச்சத்து வார விழா நடந்தது. ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் வாரம் ஊட்டச்சத்து வாரமாக கடை பிடிக்கப்படுகிறது. பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் விக்ரமன், நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசுகையில், ‘ஊட்டச்சத்து குறைபாடு மாணவ, மாணவிகளின் கற்றலில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். அதனை தவிர்க்கவே தமிழக அரசு பள்ளிகளில் வாரத்தின் 5 நாட்களிலும் மதிய உணவுடன் முட்டை சேர்த்துத் தரப்படுகிறது.இதனால் மாணவ, மாணவிகள் உடல் மற்றும் மனம் மேம்பாடு அடைதுவதுடன், சுறுசுறுப்பாக கற்றலில் ஈடுபடவும் நினைவாற்றலை மேம்படுத்திக் கொள்ளவும் முட்டை உதவுகிறது. தவறாமல் மதிய உணவுடன் முட்டையை உட்கொள்ள வேண்டும்,’ என்றார்.
+
Advertisement