அரூர், ஆக.8: அரூரில், வாழை நார் பதப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். வாழை மரத்தின் தண்டு, பூ, பழம், காய் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் உணவாக பயன்படுகிறது. மருத்துவ குணம் கொண்டது என்பதால், வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களின் பாரம்பரியமாக உள்ளது. அதில் உள்ள நாரும், பூ மாலை கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. வாழை தோப்பை குத்தகைக்கு எடுக்கும் வியாபாரிகள், வாழைக்காய்களை அறுவடை செய்த பின்னர், அதன் தண்டை தனியாக பிரித்து விற்பனை செய்வதுடன் அதன் மட்டையை உரித்து 5 நாட்கள் வரை பதப்படுத்தி பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் அலங்கார பொருட்கள் செய்வதற்கும், மொத்த பூ மார்க்கெட்டிற்கும் அதனை அனுப்புகின்றனர். ஒரு கட்டு ரூ.800 வரை விற்பனை செய்யப்படுகிறது.
+
Advertisement