தர்மபுரி, ஆக.2: தர்மபுரி எம்ஜிஆர் நகர் நாகாத்தம்மன், நாகபத்தரகாளி புற்று கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சுமங்கலி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் வளையல், ஜாக்கெட் பிட், தாலி சரடு, குங்குமம் படைத்து அம்மனை வழிபட்டனர். மேலும், பெண்கள் அம்மனுக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவையொட்டி நாகாத்தம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
+
Advertisement