தர்மபுரி, ஆக.2: பெங்களூரு- சேலம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது முதல், நாள்தோறும் சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் தர்மபுரி வழியாக செல்கின்றன. இந்த சாலையில் தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் ஆண்டுதோறும் 300 விபத்துகள் நடக்கின்றன. விபத்தில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பெங்களூரு -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ஆபத்தை உணராமல் டிரைவர்களின் அஜாக்கிரதையால் எதிர்திசையில் கனரக வாகனங்கள் இயக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு இயக்கப்படும் வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. எனவே, ரோந்து வாகன போலீசாரும், சாலை பராமரிப்பு நிறுவன ஊழியர்களும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி, விதிகளை மீறி இயக்கும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
+
Advertisement