தர்மபுரி, ஆக 4: தர்மபுரி செந்தில்நகர் வாத்தியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அருள்மணி. இவரது மனைவி சுதா(32). இவரது 7 வயது குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு, குழந்தைக்கு துணையாக அருகில் படுத்திருந்த சுதாவிடமிருந்து, மர்ம நபர் ஒருவர் பர்ஸ் மற்றும் செல்போன் ஆகியவற்றை திருடிச் சென்றார்.இதுபற்றி தர்மபுரி டவுன் போலீசில் சுதா புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மூலம் குற்றவாளியை தேடினர்.
இதில், தர்மபுரி மாதையன் மங்களம் பகுதியைச் சேர்ந்த வினோத்(25) என்பவர் பர்ஸ் மற்றும் செல்போன் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து, வினோத்தை கைது செய்த போலீசார், பர்சில் இருந்த ரூ.900 மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.