அரூர், டிச.15:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலையிலுள்ள தீர்த்தகிரீஸ்வரர் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மட்டுமின்றி, இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் புனித யாத்திரையாக வருகின்றனர். இந்நிலையில், கோயில் குளங்களில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதால் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தீர்த்தகிரீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராட வசதியாக மலையின் கீழ்பகுதியில் 21 குளங்கள் இருந்தன. இந்த குளங்களில் குளித்த பின்பு மலைக்கோலிலுக்கு சென்று, அங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடுவது மரபாக இருந்தது. இந்திலையில், குளங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியதால், தற்போது பெரியகுளம் மட்டுமே எஞ்சியுள்ளது. ஒரு குளம் முற்றிலுமாக அழிக்கப்பட்டு பஸ் ஸ்டாண்டாக மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள குளங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. எனவே, வருவாய்த்துறை சார்பில், சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
+
Advertisement


