தர்மபுரி, நவ.15: தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே ஜக்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன்(47). இவர், அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல கடையை திறந்துள்ளார். அப்போது, கடையின் பின்பக்க மேற்கூரை பிரிக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், மகேந்திரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரித்ததில், நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கடையில் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் மேற்கூரையை பிரித்துள்ளனர். அதற்குள் மக்கள் நடமாட்டம் அதிகரித்ததால் தங்களது திட்டத்தை கைவிட்டு விட்டு ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
