தர்மபுரி, அக்.12: தர்மபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில், கலைத்திருவிழா நடந்தது. இந்த கலைத்திருவிழாவில், 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடி ஆட்டம், மேளம், பறை, வாத்தியம் மூலம் வாசித்தல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வகையான கலைகளை மாணவர்கள் வாசித்தும், நடனம் ஆடியும் காண்பித்தனர். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் முருகதாஸ் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், தாவரவியல் துறைத் தலைவர் விஜயா தாமோதரன், இணைப் பேராசிரியர் மற்றும் ஐ.சி விஸ்காம் துறைத் தலைவர் பிரபாகரன், வரலாற்றுத் துறைத் தலைவர் சாரதி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறைத் தலைவர் நாகராஜன், விலங்கியல் துறைத் தலைவர் விஜயதேவன் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பாலமுருகன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement