பாலக்கோடு, அக்.12: மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆய்வு செய்தார்.தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு தலைமையில் நேற்று நடந்தது. திமுக ஒன்றிய செயலாளர் பஞ்சப்பள்ளி அன்பழகன், மாரண்ட அள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், செயல் அலுவலர் திருமூர்த்தி முன்னிலை வகித்து, முகாமினை தொடங்கி வைத்தனர். இதில், பொதுமக்களுக்கு முழுஉடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இம்முகாமினை மாவட்ட செயலாளர் பழனியப்பன், நேரில் பார்வையிட்டு மருத்துவ சேவைகள், ஆலோசனைகள் மற்றும் பரிசோதனைகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
ெதாடர்ந்து முதல்வரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை மற்றும் மாற்று திறனாளிகளுக்கான அட்டைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், மருத்துவர்கள், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.