அரூர், நவ. 11: அரூர் வேளாண்மை துறை சார்பில், அட்மா திட்டத்தில் நாளை (12ம் தேதி) காலை 10 மணி அளவில், அரூர் வேளாண்மை துறை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில், உழவர் தின விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் அறிவியல் நிலையம் பாப்பாரப்பட்டி வேளாண் பொறியியல் துறை, கால்நடை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், பட்டு வளர்ச்சி துறை மற்றும் மீன் வளர்ப்பு துறை, வன விரிவாக்க துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு தொழில்நுட்ப விவரங்களை விளக்குகின்றனர். எனவே, விவசாயிகள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, அரூர் வேளாண்மை உதவி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
+
Advertisement

