தர்மபுரி, நவ. 11: தர்மபுரி 4 ரோடு அருகில் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடி உள்ளது. இந்த அரசு அங்காடிக்கு தர்மபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த 12 விவசாயிகள், நேற்று வெண்பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 564.850 கிலோ வந்திருந்தது. பட்டுக்கூடுகள் 19 தொகுதிகளாக ஏல விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த பட்டுக்கூடுகளின் தரத்துக்கு ஏற்ப கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.735, குறைந்தபட்ச விலையாக ரூ.442, சராசரி விலையாக ரூ.630.83 நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்றைய ஏலத்தில் தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் ரூ.3லட்சத்து 57ஆயிரத்து 528க்கு வர்த்தகம் நடந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
+
Advertisement

