தர்மபுரி, ஆக. 11: தர்மபுரி மாவட்டம், மதிகோண்பாளையம் கொட்டாய்மேடு பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மகள் கலைவாணி (24). இவர் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்த பெற்றோரிடம், கடைக்கு செல்வதாக கூறி சென்ற கலைவாணி, பின்னர் வீடு திரும்பவில்லை. பலஇடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.