அரூர், டிச.8: மொரப்பூர் வட்டார விவசாயிகள், வேளாண் திட்டங்களை எளிதில் பெறும் வகையில், வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மொரப்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பழனிவேல் கூறியதாவது: மொரப்பூர் வட்டாரத்தில் உள்ள மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர், தென்கரைகோட்டை பிர்காவில் உள்ள அனைத்து விவசாயிகள் வேளாண்மைதுறையில் உள்ள நலதிட்டங்களை பெற, அவர்களது நிலத்தின் சிட்டா, ஆதார் எண் உள்ளிட்டவைகளை அந்ததந்த பகுதிகளில் உள்ள இ.சேவை மையங்களை அணுகி வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் அனைத்து வேளாண் திட்டங்களை எளிதில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


