தர்மபுரி, டிச.8: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை எஸ்ஐ சரவணன் மற்றும் போலீசார், நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி சேலம் மெயின்ரோடு, நல்லம்பள்ளி அருகே குடிப்பட்டி மேம்பாலத்தில், ரோந்து போலீசாரை பார்த்ததும், வாலிபர் ஒருவர் ஓட்டம் பிடித்துள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபரை விரட்டிப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவரிடம் கஞ்சா இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பது தெரிய வந்தது. அவரிடம் 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
+
Advertisement


