அரூர், ஜூலை 1: அரூரில் அனைத்து பகுதிகளிலும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர், பள்ளி செல்லும் மாணவர்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் தெருநாய்களால் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். அரூர் பகுதியை ஒட்டிய காப்புகாடு பகுதியில், அதிக அளவில் மான்கள் உள்ளது. அவ்வபோது வழி தவறி, நகர் பகுதிக்கும், சாலைக்கும் வந்து விடுகிறது. அவ்வாறு வழி தவறி அரூர்- மொரப்பூர் சாலையில் அரசு கலை கல்லூரி முன்பு வந்த புள்ளி மானை, அங்கிருந்த 5க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதில், மான் அங்கேயே பரிதாபமாக இறந்தது. இதை பார்த்த பொதுமக்கள், மொரப்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் இறந்த மானை கைப்பற்றி, வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.
+
Advertisement