நெய்வேலி, அக். 30: நெய்வேலி அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெய்வேலியை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கும், அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் முரளிதரன்(25) என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 28ம் தேதி மாணவி வயிற்று வலிப்பதாக பெற்றோரிடம் கூறியதன்பேரில் பெற்றோர் அவரை குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சிறுமியின் தாய் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் முரளிதரன் மீது போக்சோ வழக்கு பதிவு, ஊமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் நின்றிருந்த முரளிதரனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
+
Advertisement
