விக்கிரவாண்டி, ஆக.30: விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் செப்.1ம் தேதி முதல் பழைய சுங்க வரியில் சிறு சிறு மாற்றங்களுடன் புதிய சுங்க கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் ஆண்டுதோறும் செப்.1 முதல் நகாய் உத்தரவின் பேரில் கட்டண உயர்வு அமல் செய்யப்படும். திண்டிவனத்திலிருந்து உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி வரை 74 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள நான்கு வழிச்சாலைகளை உளுந்தூர்பேட்டை எக்ஸ்பிரஸ் வேஸ் பிரைவேட் லிட்., நிர்வகித்து வருகிறது. நகாய் உத்தரவின் பேரில் இந்தாண்டு அமல் செய்யப்பட்ட பழைய சுங்க கட்டண விபரம் பின் வருமாறு: (அடைப்பு குறிக்குள் கடந்தாண்டு வசூல் செய்யப்பட்ட கட்டண விபரம்) கார், ஜீப், பயணிகள் வேன் ஆகியவற்றிக்கு மாற்றமின்றி ஒரு வழி கட்டணம் ரூ.105(பழைய கட்டணம் ரூ.105), பல முறை பயணிக்க புதிய கட்டணம் ரூ.160 (பழைய கட்டணம் ரூ.155), மாதாந்திர கட்டணம் ரூ.3,170 (ரூ.3,100) இலகு ரக வாகனம் ஒரு வழி கட்டணம் ரூ.185 (ரூ.180), பல முறை பயணிக்க ரூ.275 (ரூ.270), மாதாந்திர கட்டணம் ரூ.5,545 (ரூ.5,420), டிரக், பேருந்து ஒரு வழி கட்டணம் ரூ.370(ரூ.360), பல முறை பயணிக்க ரூ.555(ரூ.540), பல அச்சு வாகனம் (இரு அச்சுகளுக்கு மேல்) ஒரு வழி கட்டணம் ரூ.595 (ரூ.580), பல முறை பயணிக்க ரூ.890 (ரூ.870), மாதாந்திர கட்டணம் ரூ.17,820 (ரூ.17,425), பள்ளி பேருந்து மாதாந்திர கட்டணம் ரூ.1000 மட்டும் (ரூ.1000), உள்ளூர் வாகன கட்டணம் வகை 1 மாதாந்திர பாஸ் ரூ. 150, வகை 2 மாதாந்திர பாஸ் ரூ.300 என மாற்றமின்றி வசூலிக்கப்படவுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வில் சிறிய மாற்றம் மட்டுமே செய்து மாதாந்திர கட்டணத்தில் சற்று உயர்த்தி உள்ளதால் வாகன ஓட்டிகளிடம் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
+
Advertisement